Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

By: Nagaraj Wed, 29 July 2020 4:30:19 PM

தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

courtallam,main falls,five rivers,flood,police ,குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, வெள்ளப்பெருக்கு, போலீசார்

அதேபோல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags :
|