Advertisement

மீண்டும் 4 ஜி இணைய சேவைகள் தொடக்கம்

By: Nagaraj Mon, 17 Aug 2020 4:17:41 PM

மீண்டும் 4 ஜி இணைய சேவைகள் தொடக்கம்

4 ஜி இணைய சேவை... ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் 4 ஜி இணைய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4 ஜி இணைய சேவைகள் தடை செய்யப்பட்டன.

function,supreme court,recommendation,internet service,test ,செயல்பாடு, உச்சநீதிமன்றம், பரிந்துரை, இணைய சேவை, சோதனை

இந்நிலையில், நள்ளிரவு முதல் காந்தர்பல் (Ganderbal) மற்றும் உதம்பூர் (Udhampur) மாவட்டங்களில் அதிவிரைவு இணையசேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை அடுத்து இணைய சேவைகள் சோதனை முயற்சியாக இரண்டு மாவட்டங்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இதர 18 மாவட்டங்களில் 2 ஜி சேவைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :