Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமலையில் 8105 பக்தர்கள் சுவாமி தரிசனம்; உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

திருமலையில் 8105 பக்தர்கள் சுவாமி தரிசனம்; உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

By: Nagaraj Sun, 21 June 2020 11:34:42 AM

திருமலையில் 8105 பக்தர்கள் சுவாமி தரிசனம்; உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

திருமலை ஏழுமலையானை, நேற்று முன்தினம் முழுவதும், 8105 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2089 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். அதில், 64 பேர் பெண் பக்தர்கள், 2025 பேர் ஆண் பக்தர்கள். ஆன்லைன் மூலம் 3 ஆயிரம் மற்றும் சர்வதரிசனம் டோக்கன்கள மூலம் 3 ஆயிரம் என 6 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

tirupati,revenue,darshan,temple,devotees ,திருப்பதி, வருவாய், தரிசனம், கோவில், பக்தர்கள்

இதுவரை ஜூன் 26ம் தேதி வரையில் நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி தரிசனமும், காலை 7.30 மணிமுதல் மாலை 7.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் முதல் தினசரி, 3000 பக்தர்களுக்கு கூடுதலாக தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது. திருமலை மலைபாதை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. மேலும் தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் மூலம் 38 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Tags :
|