Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இடுக்கி நிலச்சரிவில் குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு

இடுக்கி நிலச்சரிவில் குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு

By: Karunakaran Sun, 09 Aug 2020 5:08:32 PM

இடுக்கி நிலச்சரிவில் குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு

கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தது. மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது.

நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை மண்ணுக்குள் புதைந்து 26 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

tamil nadu,palanisamy,kerala chief minister,idukki landslide ,தமிழ்நாடு, பழனிசாமி, கேரள முதல்வர், இடுக்கி நிலச்சரிவு

இந்நிலையில், தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மூணாறு நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்களும் உயிரிழந்ததுள்ளனர்.

தற்போது தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார். மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :