Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- மு.க. ஸ்டாலின்

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- மு.க. ஸ்டாலின்

By: Monisha Tue, 29 Dec 2020 3:38:38 PM

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- மு.க. ஸ்டாலின்

2021 மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சியில் தி.மு.க. சார்பில் இன்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு..க தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

election,campaign,meeting,village council,advertisement ,தேர்தல்,பிரச்சாரம்,கூட்டம்,கிராமசபை,விளம்பரம்

கிராமசபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் கூறுவது முற்றிலும் பொய். சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மேலும், மக்கள் வரிப்பணத்தை வீணாக விளம்பரம் செய்கிறார்கள். தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆடிப்போயுள்ளனர். என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :