Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

By: Karunakaran Tue, 01 Dec 2020 11:43:38 AM

3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசு கொண்டுள்ள வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பிரதிநிதிகளுடன் 3-ந்தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்து உள்ளது.

taxi drivers,strike,farmers struggle,delhi ,டாக்ஸி ஓட்டுநர்கள், வேலைநிறுத்தம், விவசாயிகள் போராட்டம், டெல்ஹி

இதுகுறித்து அகில இந்திய டாக்சி யூனியன் சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங் புல்லார் கூறுகையில், ‘டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர், உள்துறை மந்திரி, வேளாண் மந்திரி ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கிறோம். கார்ப்பரேட் துறை எங்களை அழித்து வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர், 2 நாட்களுக்குள் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், நாங்கள் எங்கள் வாகனங்களை சாலைகளில் இருந்து அகற்றி விடுவோம். 3-ந்தேதி முதல் டாக்சிகளை ஓட்ட வேண்டாம் என நாடு முழுவதும் உள்ள டிரைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags :
|