Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் கோவில்கள் திறக்கப்படும்; அரசு அறிவிப்பு

வரும் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் கோவில்கள் திறக்கப்படும்; அரசு அறிவிப்பு

By: Nagaraj Wed, 27 May 2020 11:54:12 AM

வரும் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் கோவில்கள் திறக்கப்படும்; அரசு அறிவிப்பு

வரும் 1 -ம் தேதி முதல் கோவில், ஆலயம், பள்ளிவாசல்கள் திறக்கப்படும். அதே நேரத்தில் மத கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறியிருப்பதாவது:

பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம்.

temples,churches,mosques,musrai department ,கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், முஸ்ராய் துறை

அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.

மேலும் கோவில்களில் அன்றாட நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில் மத கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. பிற மத வழிபாட்டு தலங்களுக்கும் இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அமைச்சர் அறிவிப்பு வெளியான போதிலும் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.

கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் இவை இரண்டும் முஸ்ராய் துறையின் அதிகார வரம்பிற்குள் வராததால் அவைகளை மீண்டும் திறப்பது குறித்து அமைச்சரவை வியாழக்கிழமை கூடி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :