Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கு தற்காலிக தடை விதிப்பு

சீனாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கு தற்காலிக தடை விதிப்பு

By: Nagaraj Thu, 05 Nov 2020 10:37:11 PM

சீனாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கு தற்காலிக தடை விதிப்பு

இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து பல நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியது. இன்று உலகையே அச்சுறுத்தும் விதத்தில் கொரோனா பரவி வருகிறது. உலகம் முழுவதும் 4 கோடியே 81 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது 12 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது என்றாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

china,india,ban,planes,corona test ,சீனா, இந்தியா, தடை, விமானங்கள், கொரோனா பரிசோதனை

தற்போது சீனாவில் ஜின்ஜியாங் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று பரவிவருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களின் விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து வுகான் செல்லும் விமானங்களும், வுகானிலிருந்து டெல்லி செல்லும் விமானங்களும் இயக்கப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|