Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினியுடன் கூட்டணி குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்; கமல் தகவல்

ரஜினியுடன் கூட்டணி குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்; கமல் தகவல்

By: Nagaraj Mon, 14 Dec 2020 8:21:35 PM

ரஜினியுடன் கூட்டணி குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்; கமல் தகவல்

தேர்தலில் போட்டியிடுவேன்... வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்; ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்" என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெயரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று (டிசம்பர் 13) தொடங்கினார். இரண்டாவது நாளான இன்றும் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

"என் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், மதுரைக்கு வந்துதான் செல்ல வேண்டும். எனவே, எனக்கு நெருக்கமான ஊர் என்பதால், பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்கியுள்ளேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் நிச்சயமாகப் போட்டியிடுவேன். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

criticism,election,will compete,kamal,coalition ,விமர்சனம், தேர்தல், போட்டியிடுவேன், கமல், கூட்டணி

அதேபோல், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நானும், ரஜினியும் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம். ஆனால், டிசம்பர் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள்.

கூட்டணி குறித்து யார் யாரெல்லாம் என்னை அணுகுகிறார்கள் என்பதை இப்போது வெளியில் சொல்லக் கூடாது. என்னை நாத்திகவாதி என்று கூறாதீர்கள். நான் பகுத்தறிவுவாதி" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நேர்மையானவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் அங்க இருக்க வேண்டும். நேர்மையான கட்சியில் இருக்கலாமே. நேர்மை மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் மூலதனம். ஊழல் இல்லாத அரசை உருவாக்க வேண்டும்.

ஆளும் கட்சியின் மீது விமர்சனம் மாநிலம் முழுவதும் இருக்கிறது. புகழும், ஆதரவும் எங்களுக்கு அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு பதற்றம் இருக்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை." என்றார்.

Tags :
|