Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரல் 30ம் தேதி வரை ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய அவகாசம்

ஏப்ரல் 30ம் தேதி வரை ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய அவகாசம்

By: Nagaraj Wed, 16 Dec 2020 4:19:19 PM

ஏப்ரல் 30ம் தேதி வரை ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய அவகாசம்

அவகாசம் நீட்டிப்பு... ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஸ்ரம் பள்ளியை வாடகை கட்டடத்தில் நடத்தி வருகிறார். இதன் உரிமையாளர் வெங்கடேஷ் வரலு என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளிக்கான வாடகை தொகையை சரிவர தராமல் ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாக கூறினார். இந்த வழக்கில் தலையிட்ட நீதிமன்றம் ரூ.11 கோடியை உடனடியாக தரமுடியாததால், உடனடியாக ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 10 லட்சம் தரும்படியும் தெரிவித்தார்.

warning,student admission,prohibition,lata rajinikanth,school ,எச்சரிக்கை, மாணவர் சேர்க்கை, தடை, லதா ரஜினிகாந்த், பள்ளி

இதற்கான ஒப்பந்தத்தில் வெங்கடேஷ்வரலு கையெழுத்து போட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் ஆவணத்தில் கையெழுத்து போடாமலும், வழக்கம் போல பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்தார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம் இடத்தை காலி செய்ய அறிவுறுத்தியது. கொரோனா காரணாமாகச உரிய நேரத்தில் பள்ளி வளாகத்தை காலி செய்ய முடியவில்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சார்ந்த செயலாளரான லதாவின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் அவகாசம் தந்துள்ளது. ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021 22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 30 க்கு பின் காலி செய்யாவிடில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :