Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓட்டப்பயிற்சியின் போது திடீரென எதிரில் வந்து நின்ற கரடி

ஓட்டப்பயிற்சியின் போது திடீரென எதிரில் வந்து நின்ற கரடி

By: Nagaraj Mon, 31 Aug 2020 8:48:36 PM

ஓட்டப்பயிற்சியின் போது திடீரென எதிரில் வந்து நின்ற கரடி

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த இளம்பெண் எதிரே ஒரு கரடி வந்து நிற்க அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து அந்த கரடி அவரை தட்டிக் கொடுப்பதுபோல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Coquitlam நகரில், Sam Abdullah என்பவர் வழக்கம் போல் மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பெண் அவருக்கு எதிரே வந்துள்ளார். திடீரென அந்த பாதையில் கரடி ஒன்று குறுக்கிட திடுக்கிட்டுப்போய் நின்றுள்ளார் அந்த பெண்.

அந்த கரடி அந்த இளம்பெண்ணை நெருங்க, அந்த பெண் அப்படியே பயத்தில் உறைந்து நிற்க, இந்தப்பக்கம் இந்த சம்பவத்தை வீடியோ எடுப்பவரும் என்ன ஆகுமோ என அச்சத்துடன் நிற்க, கரடி அந்த பெண்ணை மேலும் நெருங்குகிறது. தனது காலால் அந்தப் பெண்ணை ஒரு தட்டு தட்டிவிட்டு பின்வாங்குகிறது அந்த கரடி. பின்னர் அவர் நிற்பதை கண்டுகொள்ளாதது போல தெனாவட்டாக ஒரு நடைபோட, கிடைத்த இடைவெளியில் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார் அந்த இளம்பெண்.

bear,girl,shock,knocking,ringing bell ,கரடி, பெண், அதிர்ச்சி, தட்டிக் கொடுப்பது, ஒலி எழுப்பும் மணி

இந்த தகவலை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் Sam Abdullah. கரடியைப் பிடிக்க வனத்துறை அலுவலர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கும் வனத்துறை அதிகாரியான Murray Smith, கரடிகளுக்கு மனிதர்கள் மீதான பயம் குறைந்து வருகிறது, அது ஆபத்தான அறிகுறி என்கிறார்.

கரடி ஒன்றை சந்திக்க நேரிட்டால், சற்று பின்வாங்கி, கைகளை தலைக்குமேல் உயர்த்தி நீங்கள் அதைவிட பெரிதாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, அமைதியாக கரடியிடம் நீங்கள் ஒரு மனிதர் என்பதை சொல்லவேண்டும் என்கிறார் Murray Smith.

கரடி சற்று பின்வாங்கியதும் அங்கிருந்து வேகமாக அகன்றுவிட வேண்டும் என்கிறார் அவர். அல்லது கரடியை விரட்டும் ஸ்பிரே அல்லது ஒலி எழுப்பும் மணி எதையாவது கையில் கொண்டு செல்லுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|