Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது; தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தகவல்

பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது; தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தகவல்

By: Nagaraj Mon, 28 Dec 2020 09:38:34 AM

பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது; தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தகவல்

கூட்டணி தொடர்கிறது... பாஜக-அதிமுக கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது என பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் அணிப்பிரிவு மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கூட்டணி குறித்து அதிமுக எம்பி கே.பி.முனுசாமி மற்றும்பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் தனிநபர் கருத்துகளாகும். கட்சியின் கருத்தாக ஏற்க முடியாது. எங்களது கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறோம். அதனால் தொடர்ந்து கூட்டணி நீடிக்கிறது.

coalition party,bjp,aiadmk,weakening,timely ,கூட்டணி கட்சிதான், பாஜ., அதிமுக, வலுவிழக்கச் செய்யும், உரிய நேரம்

இருப்பினும் சில நேரங்களில் அதிமுக அமைச்சர்கள் வேறு விதமாக பேசுவதாக செய்திகள் வருகின்றன. அவ்வப்போது அவரவர் கட்சியைப் பலப்படுத்த கருத்துக்கள் தெரிவிப்பது வழக்கமான ஒன்று. அவ்வாறான கருத்துகள் தலைமையிடமிருந்தோ அல்லது அதற்கான பொறுப்பாளரிடம் இருந்தோ வருமேயானால் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இதுபோன்று வரும் செய்திகள் கூட்டணியை வலுவிழக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயர் உண்டாக்கவும் திமுக செய்யும் சதி. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். தற்போது வரை அதிமுக எங்களது கூட்டணி கட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|