Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருகிறது - சிவசேனா

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருகிறது - சிவசேனா

By: Karunakaran Wed, 15 July 2020 11:28:25 AM

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருகிறது - சிவசேனா

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அங்கு பரபரப்பான அரசியல் சூழல் உருவாகி உள்ளது.

தற்போது ராஜஸ்தான் விவகாரத்தில் சிவசேனா கட்சி பாரதீய ஜனதாவை கடுமையாக சாடியுள்ளது.பாஜக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் ஈடுபடுவதாகவும், குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

bjp,shiv sena,dissolve,congress ,பாஜக, சிவசேனா, ஆட்சி கலைப்பு, காங்கிரஸ்

இதுகுறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். நாடு கொரோனா பிரச்சினையால் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் பிரச்சினையை தீர்ப்பதைவிட்டு பாஜக காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையில் தலையிட்டு, ராஜஸ்தானில் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் அதில், சில மாநிலங்களை எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யவும் விடவேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு பெருமிதமாக இருக்கும். பைலட்டும், சிந்தியாவின் வழியில் செயல்படுவார் என்பது எல்லோரும் கணித்தது தான். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு தான் ராஜஸ்தானில் காங்கிரசின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.

Tags :
|