Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை - கே.எஸ்.அழகிரி

இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை - கே.எஸ்.அழகிரி

By: Monisha Mon, 25 May 2020 4:57:33 PM

இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை - கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனித இனம் இதுவரை காணாத வகையில் கொரோனா தொற்று காரணமாக அச்சம் பீதியால் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் வேலைவாய்ப்பு, வருமானத்தை இழந்து வாழ்வாதாரமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி விட்டது.

பிரதமர் மோடி அறிவித்த நிவாரணம் ரூபாய் 20 லட்சம் கோடி. உண்மையில் கணக்கிட்டால் ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான். இது மொத்த ஜிடிபியில் 0.91 சதவிகிதமே தவிர 10 சதவிகிதம் அல்ல. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19-ல் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20-ல் அது 2.57 லட்சமாக குறைந்துள்ளது.

central government,ks alagiri,prime minister modi,new jobs,congress ,மத்திய அரசு,கே.எஸ்.அழகிரி,பிரதமர் மோடி,புதிய வேலைவாய்ப்புகள்,காங்கிரஸ்

வறுமை ஒழிப்புத் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜ்னா தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20-ல் குறைந்துள்ளன.

இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :