Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்!

தலைமை தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்!

By: Monisha Mon, 16 Nov 2020 11:29:06 AM

தலைமை தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார். மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 12.35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 2,481 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர்களில் ஆண்கள் 6.08 லட்சம், பெண்கள் 6.27 லட்சம், 3ம் பாலினம் - 138 பேர்.

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

election,satyapratha saku,voter list,opportunity,district wise ,தேர்தல்,சத்யபிரத சாகு,வாக்காளர் பட்டியல்,அவகாசம்,மாவட்ட வாரி

பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்வாறு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ந்தேதியன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதனைதொடர்ந்து ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :