Advertisement

கூட்டணியில் 60 இடம் வேண்டும்; கிடுக்கிபிடி போடும் பாஜக

By: Nagaraj Mon, 14 Dec 2020 7:50:29 PM

கூட்டணியில் 60 இடம் வேண்டும்; கிடுக்கிபிடி போடும் பாஜக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகள் ஒதுக்கவேண்டும். முக்கிய தொகுதிகள் வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜக நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் அதிமுக கூட்டணியும், மறுபக்கம் திமுக கூட்டணியும் களம் காண்கிறது. இரு திராவிட கட்சிகளுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது.

தமிழகத்தில் வரும் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபட தெரிவித்தனர்.

consulting,key blocks,aiadmk,bjp,information ,ஆலோசனை, முக்கிய தொகுதிகள், அதிமுக, பாஜ, தகவல்

இதேபோல, கூட்டணியை பாஜக மூத்ததலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்த போது, உறுதிபடுத்தினார். இதனால், பாஜக - அதிமுக கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும், இருகட்சிகளும் ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில்தான் தற்போது தேர்தல் கூட்டணி குறித்து பிரச்சனை வெடித்துள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் 60 கேட்டு பாஜக தலைமை முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இன்று சென்னையில் நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், இது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|