Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை-ஜெகதீஷ்ஷெட்டர்

ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை-ஜெகதீஷ்ஷெட்டர்

By: Karunakaran Wed, 10 June 2020 11:29:39 AM

ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை-ஜெகதீஷ்ஷெட்டர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் காங்கிரஸ் இடைகால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கட்சியில் பொதுச்செயலாளராக ப்ரியங்கா காந்தி உள்ளார்.

இந்நிலையில் உப்பள்ளியில் நேற்று தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் பேட்டி அளித்தபோது, நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை எனவும், ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை எனவும் கூறினார்.

வரும் 19-ஆம் தேதி கர்நாடகாவில் மாநிலளங்கவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தேவே கவுடா போட்டியிட காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தேவே கவுடாவிற்கு முழு ஆதரவு தருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jagadish shettar,rahul gandhi,congress,karnataka ,ஜெகதீஷ்ஷெட்டர், ராகுல்காந்தி, கர்நாடகா,காங்கிரசு

இதுகுறித்து ஜெகதீஷ்ஷெட்டர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை எனவும், கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டது அவர்களது உட்கட்சி விவகாரம். எனவும் கூறினார். மேலும், கர்நாடகாவில் 10 கோடி மதிப்பிலான போலி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதம் செய்யப்படும் எனவும், போலி விதைகளை வாங்கி பயன்படுத்திய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

Tags :