Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் தேர்தலில் தேஜஸ்வி வெற்றி வாய்ப்பை சிதறடித்த காங்கிரஸ்

பீகார் தேர்தலில் தேஜஸ்வி வெற்றி வாய்ப்பை சிதறடித்த காங்கிரஸ்

By: Karunakaran Wed, 11 Nov 2020 5:45:45 PM

பீகார் தேர்தலில் தேஜஸ்வி வெற்றி வாய்ப்பை சிதறடித்த காங்கிரஸ்

பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியிருந்தன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 144 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும், 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 19 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளில், 144 தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்டு (எம்.என்.) கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 12-ல் வெற்றி வாகை சூடியது. அதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் 50 சதவீத வெற்றியை அறுவடை செய்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது.

congress,tejasw,bihar election,chief minister ,காங்கிரஸ், தேஜஸ்வ், பீகார் தேர்தல், முதல்வர்

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மிக பலவீனமாக இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மெகா கூட்டணியில் தேஜஸ்வி மிக சிறப்பாக தேர்தல் பிரசாரம் செய்து மக்கள் ஆதரவை திரட்டினார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் மக்கள் ஆதரவை திரட்டி இருந்தால் தேஜஸ்வி முதல்-மந்திரி பதவியை எட்டி பிடித்திருக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு எந்த இன வாக்குகளும் பெருவாரியாக கிடைக்காமல் போய்விட்டது.

காங்கிரஸ் கட்சி தனக்கு வழங்கப்பட்டிருந்த 70 தொகுதிகளில் கூடுதலாக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் பீகார் சட்டசபை தேர்தலின் முடிவே வேறு விதமாக அமைந்திருக்கும். ராகுல் மட்டுமே வந்து சில கூட்டங்களில் பேசினார். இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், நாங்கள் பிரசாரத்துக்கு முழுக்க முழுக்க தேஜஸ்வியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று வேதனையோடு தெரிவித்தனர்.


Tags :
|