Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி மாதத்திற்கு 6 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடிவு

கொரோனா தடுப்பூசி மாதத்திற்கு 6 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடிவு

By: Nagaraj Mon, 24 Aug 2020 7:37:34 PM

கொரோனா தடுப்பூசி மாதத்திற்கு 6 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடிவு

6 மில்லியன் டோஸ் உற்பத்தி... கொரோனா வைரஸ் தடுப்பூசியை மாதத்திற்கு 6 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தை நடப்பாண்டின் இறுதிக்குள் மாதத்திற்கு ஒன்றரை மில்லியன் முதல் 2 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

russia,vaccine,test,industrial,6 million doses ,ரஷ்யா, தடுப்பூசி, சோதனை, தொழில்துறை, 6 மில்லியன் டோஸ்கள்

இந்த உற்பத்தியை படிப்படியாக உயர்த்தி, மாதத்திற்கு 6 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய தொழில்துறை அமைச்சர் டெனிஸ் மந்துரோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்யா உருவாக்கிய தடுப்பூசியின் பெரிய அளவிலான சோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 100 கோடி கொரோனா தடுப்பூசிக்கு உலக நாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|