Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தலில் வெற்றிப்பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்

தேர்தலில் வெற்றிப்பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்

By: Nagaraj Sat, 24 Oct 2020 7:19:23 PM

தேர்தலில் வெற்றிப்பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்

அனைவருக்கும் இலவசம்... அமெரிக்க அதிபர் தேர்தலில், "நான் வெற்றி பெற்றால் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்" என ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நோக்கி அகில உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோபிடன் இடையேயான இறுதி விவாதம் நேற்று களை கட்டியது.

இந்த நிலையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் ஜோபிடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நான் அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றார்.

jopitan,vaccine free,promise,usa,promise ,ஜோபிடன், தடுப்பூசி இலவசம், வாக்குறுதி, அமெரிக்கா, வாக்குறுதி

மேலும், கொரோனா பெருந்தொற்றை நாட்டை விட்டே விரட்டுவேன் என்றும் சபதமிட்டார்.

குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பும் இதே வாக்குறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக. உலகமே பயந்து நடுங்கும் அமெரிக்காவே இருந்தாலும், நம்மூர் அரசியலுக்கு ஈடாகுமா என்பது இதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நம்மூரிலும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|