Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாரஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜக அரசு 3 நாட்களில் கவிழ்ந்த நாள்

மகாரஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜக அரசு 3 நாட்களில் கவிழ்ந்த நாள்

By: Karunakaran Tue, 24 Nov 2020 1:25:42 PM

மகாரஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜக அரசு 3 நாட்களில் கவிழ்ந்த நாள்

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54, மற்றவை 29 தொகுதிகளை கைப்பற்றின. ஆட்சியமைக்க 145 தொகுதிகள் தேவை என்றாலும் பாஜக-சிவசேனாவுடன் கூட்டணி அமைத்திருந்ததால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது. இதனால், பெரும்பான்மை யாருக்கும் இல்லாததால் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். ஆனால், அதற்கு அடுத்தநாள் யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் பாஜகவின் தேவேந்திரபட்னாவிசுடன் இணைந்து ஆட்சியமைத்தார்.

bjp government,maharashtra,sivasena,memorial day ,பாஜக அரசு, மகாராஷ்டிரா, சிவசேனா, நினைவு நாள்

தேவேந்திரபட்னாவிஸ் மீண்டும் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார். பதவியேற்பு விழா நவம்பர் 23 காலை 8 மணிக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 24-ம் தேதி முதல் பட்னாவிஸ் மாநிலமுதல்மந்திரியாக முறைப்படி பொறுப்பேற்றார். பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ராஜினாமா செய்தது. பதவியேற்ற 80 மணி நேரத்திலேயே பதவியில் இருந்து பாஜக அரசு ராஜினாமா செய்தது. 3 நாட்கள் பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்மந்திரியாக இருந்தார். இதையடுத்து, சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. இந்நிலையில் இன்று அதே தினத்தை முன்னிட்டு பாஜகவை சிவசேனா வெளுத்து வாங்கியுள்ளது.

Tags :