Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையேயான சண்டையில் உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையேயான சண்டையில் உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது

By: Karunakaran Thu, 01 Oct 2020 4:19:36 PM

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையேயான சண்டையில் உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது

அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளும் இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்து சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது. இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

death toll,fight,armenia,azerbaijan ,இறப்பு எண்ணிக்கை, சண்டை, ஆர்மீனியா, அஜர்பைஜான்

பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது. அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் ராணுவம் முதல் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் நேரடியாக இறங்கியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 4-வது நாளாக சண்டை நீடித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சண்டையில் நகோர்னோ-கராபத் தன்னாட்சி மாகாணத்தின் படையினரே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். சிறுசிறு மோதலாக தொடங்கிய சண்டை தற்போது அர்மீனியா - அசர்பைஜான் இடையே நேரடி மற்றும் முழுமையான போராக மாறியுள்ளது.

Tags :
|