Advertisement

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக தகவல்

By: Nagaraj Fri, 04 Dec 2020 10:10:33 PM

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இன்று காலை ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் இருந்தது. பாம்பனில் இருந்து 70 கி.மீ., கன்னியாகுமரியில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது.

weather,research center,depression,heavy rain ,வானிலை, ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வு,  கனமழை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து புரெவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதனால் அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :