Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவ்வபோது மழை பெய்யும் வாய்ப்பு என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

அவ்வபோது மழை பெய்யும் வாய்ப்பு என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:44:25 PM

அவ்வபோது மழை பெய்யும் வாய்ப்பு என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

அவ்வபோது மழை பெய்யும் வாய்ப்பு... வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சியில் ஓரளவான அதிகரிப்பு இன்று இரவு நேரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ocean,moderate tide,colombo,wind speed,rain ,கடற்பரப்பு, மிதமான அலை, கொழும்பு, காற்றின் வேகம், மழை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து காங்கேசந்துறை ஊடாகதிருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: கொழும்பிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|