Advertisement

கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களானது சேலம், கோவை

By: Nagaraj Fri, 15 May 2020 8:52:59 PM

கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களானது சேலம், கோவை

தொற்று இல்லாத மாவட்டங்களானது... சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களானது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 9,674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

coimbatore,green zone,salem,corona,discharge ,கோவை, பச்சை மண்டலம், சேலம், கொரோனா, டிஸ்சார்ஜ்

கடந்த மார்ச் 11ம் தேதி முதல் பாதிப்பை பதிவு செய்த சேலத்தில் இதுவரை 24 ஆண்கள், 11 பெண்கள் என 35 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடைசியாக சிகிச்சை பெற்று வந்தவர்களும் இன்று (மே 15) குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

இதனால் சேலம் கொரோனா இல்லாத மாவட்டமானது. அதேபோல், கோவை மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமானது. அங்கு அனைவரும் டிஸ்சார்ஜ் ஆனநிலையில், கடந்த 2 வாரங்களாக அங்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லாததால் பச்சை மண்டலமாக கோவை மாறியுள்ளது.

Tags :
|
|