Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் துணை முதல்-மந்திரிக்கு காங்கிரசில் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளது - காங்கிரஸ் கட்சி

ராஜஸ்தான் துணை முதல்-மந்திரிக்கு காங்கிரசில் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளது - காங்கிரஸ் கட்சி

By: Karunakaran Tue, 14 July 2020 10:20:27 AM

ராஜஸ்தான் துணை முதல்-மந்திரிக்கு காங்கிரசில் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளது - காங்கிரஸ் கட்சி

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட்க்கும் , துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் உள்ளது. இந்நிலையில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிக்கு மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பியதால், இருவருக்கும் இடையே இருந்த மோதல் மேலும் பயங்கரமாக வெடித்தது.

போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை அவமானப்படுத்துவதற்காகவே இந்த நோட்டீஸ் அனுப்ப வைத்ததாக சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட் நேற்று முன்தினம் ராஜஸ்தான் திரும்பியபின், தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

rajasthan,deputy first minister,sachin pilot,congress ,ராஜஸ்தான், துணை முதல்வர், சச்சின் பைலட், காங்கிரஸ்

ராஜஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால், எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெருக்கடியை தவிர்க்க மூத்த தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், மாநில காங்கிரஸ் பார்வையாளர் அவினாஷ் பாண்டே போன்றோர் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சச்சின் பைலட்டிடம் கடந்த 72 மணி நேரத்தில் பலமுறை கட்சித்தலைமை பேசியுள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடு எழும்போது, அதை குடும்பத்துக்குள்ளேயே பேசி தீர்க்க முடியும். அதற்காக குடும்பத்தை கலைக்கக்கூடாது.சச்சின் பைலட்டுக்கும், பிற எம்.எல்.ஏ.க் களுக்கும் காங்கிரசில் கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன. அவர்களது குறைகள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும். இதுவே கட்சியின் ஒழுங்கு முறை என ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Tags :