Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் 18வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் 18வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்

By: Nagaraj Sun, 13 Dec 2020 3:31:56 PM

டெல்லியில் 18வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்

18வது நாளாக தொடரும் போராட்டம்... வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 18ஆவது நாளாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும், பெரு நிறுவனங்களிடம் அடிமைப்படும் நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் கருதுகின்றனர்.

இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நவம்பர் 26 முதல் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதாக மத்திய அரசு கூறிவருகிறது. சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறெதையும் ஏற்க முடியாது என விவசாயிகளும் தெரிவித்து விட்டனர்.

farmers,struggle,delhi,fasting,checkpoint ,விவசாயிகள், போராட்டம், டெல்லி, உண்ணாவிரதம், சோதனைச்சாவடி

இந்நிலையில் பதினெட்டாவது நாளாக விவசாயிகளின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. இன்று டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாகவும், நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் ராஜஸ்தான் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துள்ளனர். இதனிடையே டெல்லியைச் சுற்றி சிங்கு, திக்ரி, காசிப்பூர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தடுப்புகள் அமைத்துள்ளதுடன் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காசிப்பூர் சுங்கச்சாவடி முன் போராடும் விவசாயிகளுக்குப் பஞ்சாபைச் சேர்ந்த இரட்டையர்கள் குளிரைத் தாங்கும் உடைகளை இலவசமாக வழங்கினர்.

Tags :
|