Advertisement

விவசாயிகள் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது

By: Nagaraj Tue, 29 Dec 2020 10:03:23 PM

விவசாயிகள் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் இன்று 34-வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

negotiation,new delhi,farmers,struggle,demand ,பேச்சுவார்த்தை, புதுடில்லி, விவசாயிகள், போராட்டம், கோரிக்கை

இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதை விவசாயசங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

இந்நிலையில் 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஆலோசிக்க வேண்டிய 4 முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர். நாளை 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில் பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பினரும் தயாராகிறார்கள்.

விவசாயிகள் முன் வைத்துள்ள 4 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்குமா என்பது நாளை நடைபெறும் 6-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது தெரியவரும்.

Tags :