Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கினர்

மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கினர்

By: Nagaraj Wed, 30 Dec 2020 7:27:35 PM

மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கினர்

6ம் கட்ட பேச்சுவார்த்தை... வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் 35-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு ஏற்னகவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை விவசாயிகள் மறுத்து வந்த நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர்.

agricultural laws,cancellation,negotiations,farmers,delhi ,வேளாண் சட்டங்கள், ரத்து, பேச்சுவார்த்தை, விவசாயிகள், டில்லி

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இன்று (டிச.30) மாலை வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் வலுவாக முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :