Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை- புதுடில்லிக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

மதுரை- புதுடில்லிக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

By: Nagaraj Fri, 21 Aug 2020 9:08:01 PM

மதுரை- புதுடில்லிக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

மதுரை விமான நிலையத்திலிருந்து புதுடில்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது.

மதுரை விமான நிலையத்திலிருந்து ஏற்கெனவே புதுடில்லிக்கு விமான சேவை இருந்தது அந்த விமானங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வழியாக புதுடில்லிக்கும், மற்றொரு விமானம் மும்பை வழியாக புதுடில்லி சென்றன.

madurai,new delhi,direct air service,officers,information ,மதுரை, புதுடில்லி, நேரடி விமான சேவை, அதிகாரிகள், தகவல்

இந்நிலையில், திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் தனியார் விமானம் ஒன்று மதுரையில் இருந்து நேரடியாக புதுதில்லிக்கு சேவையை தொடங்கியுள்ளது. இதனால் பயண நேரம் மூன்றே முக்கால் மணி நேரம் ) வெகுவாக குறைகிறது.

இந்த விமானம் புதுடில்லியிலிருந்து காலை 11. 15 மணி அளவில் புறப்பட்டு 2:30 மணியளவில் மதுரை வந்தடையும். அதே விமானம் பிற்பகல் 3.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு புது டில்லி சென்று அடையும் என தனியார் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :