Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு

By: Nagaraj Wed, 14 Oct 2020 3:40:55 PM

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு

வர்த்தமானி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு... சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் (புதன்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.

minister of health,social gap,law,arrest ,சுகாதார அமைச்சர், சமூக இடைவெளி, சட்டம், கைது

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கைது செய்யப்படுவோருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|