Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளப்பெருக்கால் அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது

வெள்ளப்பெருக்கால் அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது

By: Nagaraj Fri, 18 Dec 2020 8:00:26 PM

வெள்ளப்பெருக்கால் அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது

வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது... விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காணை- கெடாருக்கு இடையே அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து தரைப்பாலத்திற்கு மேல் 2 அடிக்கு தண்ணீர் சென்றது. நேற்று காலையில் இருந்தும் நேரம் செல்ல, செல்ல ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் சீறிப்பாய்ந்து சென்றது.

ground bridge,broken,villupuram,rain flood,protection ,தரைப்பாலம், உடைந்தது, விழுப்புரம், மழை வெள்ளம், பாதுகாப்பு

தொடர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் திடீரென அந்த தரைப்பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்து சேதமடைந்தது.
இதனால் அகரம்சித்தாமூர், வாழப்பட்டு, கெடார், செல்லங்குப்பம், சூரப்பட்டு உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் விழுப்புரம் வருவதற்கான பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கண்ட கிராம மக்கள், திருவண்ணாமலை சாலை சென்று சுமார் 12 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து செல்கின்றனர். மேலும் தரைப்பாலம் உடைந்தது தெரியாத அளவிற்கு மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|