Advertisement

டிரம்ப் பெயரில் உள்ள ஹோட்டல் மூடுவிழா காண்கிறது

By: Nagaraj Sat, 29 Aug 2020 6:44:43 PM

டிரம்ப் பெயரில் உள்ள ஹோட்டல் மூடுவிழா காண்கிறது

டிரம்ப் பெயரில் உள்ள ஹோட்டல் மூடுவிழா காண்கிறது.. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெயரில் கனடாவில் செயல்பட்டு வந்த பிரபலமான ஹோட்டல் ஒன்று மூடுவிழா காண உள்ளது.

டவுன்டவுன் வான்கூவர் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலின் முக்கிய நிர்வாகிகளால் கடந்த வியாழக்கிழமை திவாலானதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஹோட்டலின் நிர்வாகிகள் குழுவினரின் கூட்டம் செப்டம்பர் 16 திகதி முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hotel,closing,management,booking,disabled ,ஹோட்டல், மூடுவிழா, நிர்வாகம், முன்பதிவு, முடக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட டிரம்ப் ஹோட்டலானது தற்காலிகமான முடக்கம் என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது ஹோட்டலின் இணையம் வழியான முன்பதிவுகளும் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்திடமிருந்து கூடுதல் விவரங்களுக்கு காத்திருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|