Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக கருத்து

கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக கருத்து

By: Karunakaran Wed, 02 Sept 2020 10:19:35 AM

கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக கருத்து

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 23-ந்தேதி முடிவடைந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 14-ந்தேதி தொடங்கி, அக்டோபர் 1-ந்தேதி முடிவடைகிறது. சீனாவுடன் ஒரு தடவையும், பாகிஸ்தானுடன் 2 தடவையும் போர் நடந்த சமயங்களிலும், பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பாராளுமன்றம் வழக்கம்போல் செயல்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்காக பாராளுமன்றம் கூடும் தேதி தாமதமானது. தற்போது, 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. சமூக இடைவெளியுடன் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கொரோனாவுக்கு பயப்படாமல், அதை வெற்றி கொண்டதன் அடையாளமாக இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

parliamentary session,sign,victory,corona virus ,பாராளுமன்ற அமர்வு, அடையாளம், வெற்றி, கொரோனா வைரஸ்

கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுடன் போர் மூண்டபோது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியது. கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் மூண்டபோது, மழைக்கால கூட்டத்தொடர் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டபோதிலும், ஒரு மாதத்துக்கு மேலாக கூட்டம் நடந்தது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, பாராளுமன்றம் தடையின்றி நடந்தது.

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அது 1977-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை அது அமலில் இருந்தது. அந்த காலகட்டத்தில் 5 கூட்டத்தொடர்கள் நடத்தப்பட்டன. கேள்வி நேரம் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் மந்திரிகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனாவுக்கு மத்தியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

Tags :
|