Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது

By: Nagaraj Mon, 07 Dec 2020 4:27:59 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது

ஒன்றரை கோடியை கடந்த கொரோனா பாதிப்பு... அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒன்றரை கோடியை கடந்துள்ளது.

அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,vulnerability,usa,restrictions ,
கொரோனா, பாதிப்பு, அமெரிக்கா, கட்டுப்பாடுகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, அடுத்த வாரத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அமலுக்கு வரும் என, அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தற்போது வரை ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
|
|