Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் வழியில் ஜப்பானில் புயலில் சிக்கி மாயம்

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் வழியில் ஜப்பானில் புயலில் சிக்கி மாயம்

By: Karunakaran Sat, 05 Sept 2020 09:09:38 AM

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் வழியில் ஜப்பானில் புயலில் சிக்கி மாயம்

நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி ‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும் கடந்த 14-ந்தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தபோது, ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் புயலில் சிக்கி மாயமானது.

புயலில் சிக்கி மாயமாகும் முன், இந்த கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு துயர அழைப்பு சென்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘பி-3சி’ என்ற கண்காணிப்பு விமானம், உயிர் காப்பு உடை அணிந்து, ஒருவர் கடலில் இருந்தவரை பத்திரமாக மீட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் மீட்கப்பட்டாலும், தான் வந்த கப்பல் கவிழ்ந்து மூழ்கி விட்டதாக கூறி உள்ளார்.

storm,japan,cargo ship,china ,புயல், ஜப்பான், சரக்குக் கப்பல், சீனா

அந்த கப்பலில் சிப்பந்திகளாக வந்த 43 பேரில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர், 2 பேர் நியூசிலாந்து நாட்டினர், 2 பேர் ஆஸ்திரேலிய நாட்டினர் என தகவல்கள் கூறுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிப்பந்தி மீட்கப்பட்டு விட்ட நிலையில், மற்ற 42 சிப்பந்திகள் மற்றும் 6 ஆயிரம் கால்நடைகள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. ஜப்பானில் ஒசாகாவில் உள்ள துணைத்தூதரகம் நிலைமையை கண்காணித்து, அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

பலத்த சூறாவளியும், இடைவிடாத மழையும் காணாமல் போன கப்பலை தேடும் முயற்சியில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மேசாக் புயலால், தென் கொரிய நகரமான புசான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,200 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 1.20 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags :
|
|