Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி பற்றிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி பற்றிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அமைச்சகம்

By: Nagaraj Wed, 09 Dec 2020 10:37:41 PM

கொரோனா தடுப்பூசி பற்றிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி பற்றி வெளியான ஊடக அறிக்கை தவறானது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் வைரசால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடியை நெருங்கி வருகிறது. அதே சமயம் வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியா உட்பட சில நாடுகள் மனிதர்களின் உடலில் தடுப்பூசியினை செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன.

இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்துள்ளன.

denial,bharat biotech,vaccine,kovacsin,ministry of health ,மறுப்பு, பாரத் பயோடெக், தடுப்பூசி, கோவாக்சின், சுகாதார அமைச்சகம்

ஆனால் இந்த நிறுவனக்களின் தடுப்பூசிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக்கின் அவசரகால தடுப்பூசி குறித்த அறிக்கை தவறானது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து பாரத் பயோடெக் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா கூறும் போது பாரத் பயோடெக் ன், கோவாக்சின் தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என்று நம்புவதாக கூறினார்.

Tags :
|