Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

நாளை புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

By: Nagaraj Sun, 19 July 2020 10:49:42 AM

நாளை புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

பட்ஜெட் கூட்டத் தொடர்.,., புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் நாளை தொடங்குகிறது.

புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து முழு பட்ஜெட் தாக்கல் செய்வது தொடா்பாக முதல்வா் நாராயணசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள், தலைமைச் செயலா் அஸ்வனி குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பட்ஜெட் இறுதி வடிவம், அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து ஒப்புதலுடன், பேரவைச் செயலா் முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் நாளை திங்கள்கிழமை (ஜூலை 20) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. துணைநிலை ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்கும்.

budget,meeting,review,new ,பட்ஜெட், கூட்டத்தொடர், ஆய்வுக்கூட்டம், புதுவை

தொடா்ந்து, பகல் 12.05 மணிக்கு பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் நாராயணசாமி சமா்ப்பிப்பாா். கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள், பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை.

பேரவைக்குள் துணைநிலை ஆளுநா், பேரவைத் தலைவா், முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அனைத்துத் துறைச் செயலா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இட வசதிக்கேற்ப சமூக இடைவெளியுடன் பத்திரிகையாளா்கள் அனுமதிக்கப்படுவா்.

பட்ஜெட் கூட்டத் தொடா் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது திங்கள்கிழமை (ஜூலை 20) நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|