Advertisement

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Sun, 06 Dec 2020 4:49:39 PM

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

4 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கனடாவில் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து 569பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 12ஆயிரத்து 496பேர் உயிரிழந்துள்ளனர்.

hospital,corona,vulnerabilities,circles,4 lakhs ,மருத்துவமனை, கொரோனா, பாதிப்பு, வட்டாரங்கள், 4 லட்சம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறாயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டதோடு, 89பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 69ஆயிரத்து 977 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மூன்று இலட்சத்து 20ஆயிரத்து 096பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|