Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கனடாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

By: Nagaraj Wed, 09 Dec 2020 4:13:12 PM

கனடாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 04 இலட்சத்து 29 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona localization,increase,canada,restrictions ,கொரோனா பரவல், அதிகரிப்பு, கனடா, கட்டுப்பாடுகள்

அங்கு மொத்தமாக இதுவரை 12 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கடந்த வாரத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வரும் நிலையில் மக்கள் மத்தியில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|