Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பலியானவர்கள் எண்ணிக்கை கனடாவில் மீண்டும் அதிகரிப்பு

கொரோனா பலியானவர்கள் எண்ணிக்கை கனடாவில் மீண்டும் அதிகரிப்பு

By: Nagaraj Tue, 30 June 2020 1:34:34 PM

கொரோனா பலியானவர்கள் எண்ணிக்கை கனடாவில் மீண்டும் அதிகரிப்பு

மீண்டும் அதிகரிப்பு... கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றினால் 668 பேர் பாதிப்படைந்ததோடு, 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கனடாவில் அண்மைய தினங்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே பதிவாகி வந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

canada,hospital,lifespan,increase,treatment ,கனடா, மருத்துவமனை, உயிரிழப்பு, அதிகரிப்பு, சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,918 பேர் பாதிப்படைந்ததோடு, 8,566 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,178பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,089பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க கனடா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Tags :
|