Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழிவுகள் சேகரிக்கும் வாகனங்கள் செயல்பாடு இன்று தொடங்கப்பட்டது

கழிவுகள் சேகரிக்கும் வாகனங்கள் செயல்பாடு இன்று தொடங்கப்பட்டது

By: Nagaraj Fri, 18 Dec 2020 7:48:47 PM

கழிவுகள் சேகரிக்கும் வாகனங்கள் செயல்பாடு இன்று தொடங்கப்பட்டது

அமைச்சர் துவக்கி வைத்தார்... திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் 13 மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 35.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் 5 என 18 வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தன.

vehicles,building debris,initiated,minister ,வாகனங்கள், கட்டிடக்கழிவுகள், துவக்கி வைத்தார், அமைச்சர்

இந்த நிலையில் அவ்வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பயனற்ற கல்குவாரிகளை கண்டறிந்து மாநகர பகுதிகளில் சேகரமாகும் கட்டடக் கழிவுகளை கொண்டு குவாரிகளை புனரமைத்து பயனுள்ள நிலமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அதற்காக கட்டிடக் கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் மண்டலத்திற்கு ஒன்று எனும் வீதத்தில் 5 வாகனங்கள் வாங்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags :