Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் ஆரஞ்சு மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறுகிறது

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் ஆரஞ்சு மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறுகிறது

By: Nagaraj Wed, 20 May 2020 8:29:22 PM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் ஆரஞ்சு மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறுகிறது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்தது. இதனால் மக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:

corona,victim,tamil nadu,health department,healed ,
கொரோனா, பாதிப்பு, தமிழகம், சுகாதாரத்துறை, குணமடைந்தனர்

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 557 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8229 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

corona,victim,tamil nadu,health department,healed ,
கொரோனா, பாதிப்பு, தமிழகம், சுகாதாரத்துறை, குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று மொத்தம் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|