Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலை வகிக்கிறது

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலை வகிக்கிறது

By: Nagaraj Thu, 06 Aug 2020 8:12:50 PM

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலை வகிக்கிறது

முன்னிலை வகிக்கிறது... இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பமாகியுள்ள பின்னணியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக "தாமரை மொட்டு" சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறங்கியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதுடன், அதற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டது.

அந்த தேர்தலிலும் மாபெரும் வெற்றியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்வசப்படுத்தியிருந்ததுடன், அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக தேர்வாகியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டது.

இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிய அமைத்த கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகழ்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை நாட்டில் மாறி, மாறி ஆட்சி அமைத்திருந்ததுடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தார்.

parliament,pa,majority,president ,நாடாளுமன்றம், பொதுஜன பெரமுன, பெரும்பான்மை, ஜனாதிபதி

அப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தி இருந்த நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர், அவர் அந்த கட்சியின் ஆலோசகராக செயல்பட்டார். அவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.

அன்று முதல் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முன்னிலையான கட்சியாக திகழ்ந்து வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவுப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வாய்ந்த கட்சியாக திகழ்கின்றது. குறிப்பாக தமிழ் தரப்பினர் சிலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்க தயாராகியுள்ளன. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனேயே செயற்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ள ஜனாதிபதிக்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பதையே அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காலங்களை விட இந்த முறை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|