Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 31-ம் தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும்- ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்

31-ம் தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும்- ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்

By: Monisha Mon, 28 Dec 2020 4:09:25 PM

31-ம் தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும்-  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்

ரஜினிகாந்த் திட்டமிட்டபடி புதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறினார்கள். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஒருவர் கூறியதாவது:- தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்கிற கோ‌ஷத்தை முன்னெடுத்துள்ள எங்கள் தலைவர் ரஜினி உடல் நலனை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

எனவே புதிய கட்சியை தொடங்கும் தேதி, மாநாடு பற்றிய விவரங்களை அறிவிக்க ரஜினிகாந்த் நேரில் வரவேண்டாம். அவர் ஒருவார காலம் முழுமையாக ஓய்வெடுக்கட்டும். அதே நேரத்தில் புதிய கட்சியை தொடங்குவதற்கான தேதியை மட்டும் அறிவித்தால் போதும். நாங்கள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றுவோம்.

politics,party,announcement,retirement,executives ,அரசியல்,கட்சி,அறிவிப்பு,ஓய்வு,நிர்வாகிகள்

கடந்த 3-ம் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்த உடனேயே பல கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் மக்கள் மன்றத்தில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்று கட்சியில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியான நாங்களும் முழுமையாக களம் இறங்கி மக்களை சந்தித்து வருகிறோம். 31-ம் தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும். மாற்றத்தை விரும்பும் அனைவருமே ரஜினிகாந்தை ஆதரிக்க தயாராகி விட்டனர் என அவர் கூறினார். ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியனும்,ரஜினிகாந்த் 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான கூடுதல் அறிவிப்பை வெளியிடுவதில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புவதாகவே தெரிவித்துள்ளார்.

Tags :
|