Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேரறிவாளனுக்கு பரோல் மறுக்கப்பட்டதன் காரணம்; நீதிமன்றத்தில் சிறைத்துறை விளக்கம்

பேரறிவாளனுக்கு பரோல் மறுக்கப்பட்டதன் காரணம்; நீதிமன்றத்தில் சிறைத்துறை விளக்கம்

By: Nagaraj Tue, 04 Aug 2020 1:07:28 PM

பேரறிவாளனுக்கு பரோல் மறுக்கப்பட்டதன் காரணம்; நீதிமன்றத்தில் சிறைத்துறை விளக்கம்

நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு என்பதால் பரோல் இல்லை...
பேரறிவாளனை பரோலில் அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவரது மனு நிராகரிப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சிறைத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

perarivalan,prison,court,parole ,பேரறிவாளன், சிறைத்துறை, நீதிமன்றம், பரோல்

அதில், பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யுமாறு பேரறிவாளன் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
|
|