Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் தேர்தலில் வென்ற ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காத நாடுகள் கூறிய காரணம்

அதிபர் தேர்தலில் வென்ற ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காத நாடுகள் கூறிய காரணம்

By: Nagaraj Tue, 10 Nov 2020 08:57:56 AM

அதிபர் தேர்தலில் வென்ற ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காத நாடுகள் கூறிய காரணம்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோபைடனுக்கு பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராக தேவையான பெரும்பான்மை தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்று, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனவரி மாதம் 20ஆம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

congratulations,united states,election,problem,russia ,வாழ்த்து தெரிவிக்கவில்லை, அமெரிக்கா, தேர்தல், சிக்கல், ரஷ்யா

இந்நிலையில் அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியதோடு மட்டும் இல்லாமல் பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே பல நாட்டு தலைவர்கள் ஜோ பைடனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ரஷ்யா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து கூறாமல் அமைதியாக இருப்பது உலக அளவில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தேர்தல் முடிவுகளில் சட்ட ரீதியான சிக்கல் இருக்கின்றது. அது முடியும் வரை வாழ்த்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க தேர்தலில் தெளிவான முடிவு எப்போது வருகிறதோ அதுவரை அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கின்றார்கள்.

Tags :