Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By: Karunakaran Wed, 26 Aug 2020 12:11:05 PM

கொரோனா பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும். அதன்படி, 2019-20-ம் நிதியாண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில், 2,000 ரூபாய் நோட்டுகளின் அச்சடிப்பு மற்றும் புழக்கம் தொடர்ந்து சரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20-ம் ஆண்டில் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. அதேநேரம் 27,398 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவு. புழக்கத்தில் விட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.

reserve bank,india,coronavirus,rupee notes ,ரிசர்வ் வங்கி, இந்தியா, கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகள்

500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் அச்சிடுதல் மற்றும் வினியோக எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதல் மற்றும் புழக்கத்தில் விடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கம் இந்த ஆண்டில் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் 2 கோடியே 96 லட்சத்து 695 கள்ள நோட்டுகள் இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வங்கித்துறையில் சிக்கிய கள்ள நோட்டுகளில் 4.6 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீத நோட்டுகள் பிற வங்கிகளிலும் சிக்கியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|