Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் விவகாரம்; கோவையில் இன்று 70 சதவீத கடைகள் அடைப்பு

சாத்தான்குளம் விவகாரம்; கோவையில் இன்று 70 சதவீத கடைகள் அடைப்பு

By: Nagaraj Fri, 26 June 2020 6:53:25 PM

சாத்தான்குளம் விவகாரம்; கோவையில் இன்று 70 சதவீத கடைகள் அடைப்பு

கடைகள் அடைப்பு சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட இருவரும், மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

motorcycles,roads,convenience store,coimbatore,grocers ,
வாகன நெரிசல், சாலைகள், கடைகள் அடைப்பு, கோவை, மளிகைக்கடைகள்

இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா ஆகியோர் கடையடைப்பிற்கு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல், கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் சங்கத்தலைவர் சீனிவாசன் மற்றும் கோயம்புத்தூர் பேக்கரி சங்கத் தலைவர் அரோமா பொன்னுசாமி ஆகியோரும் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அடைத்திருக்கும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவையின் முக்கிய கடை வீதிகளான ரங்கே கவுடர் வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதியில் பெரும்பாலான மளிகைக் கடைகள் திறக்கப்படவில்லை. கடையடைப்புக்கு ஆதரவாக மருந்துக் கடைகள் காலை 7 முதல் 11 மணி வரை மூடப்பட்டன. கோவை மாவட்டத்தில் 70 சதவீதம் மளிகைக் கடைகள் இன்று முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு காரணமாக கோவையில் வாகன நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Tags :
|