Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என ஆய்வில் தகவல்

மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என ஆய்வில் தகவல்

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:16:43 PM

மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த ஆஸ்பத்திரி ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

இந்த ஆய்வின் முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அதில், நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும்.

wearing nose glasse,protection,corona virus,corona impact ,மூக்கு கண்ணாடி, பாதுகாப்பு, கொரோனா வைரஸ், கொரோனா தாக்கம்

இந்த ஆய்வு முடிவுகளில், ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது. இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கூறுகையில், இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :